Friday, 12 May 2017

காதல் விமர்சனம்


இந்த பதிவு உங்கள் மனதை பாதிப்படையச்செய்யும் என்றால் தயவு செய்து மன்னிக்கவும்.

காதலர் தினத்தன்று ஒரு பதிவைப்படித்தபோது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது ஒரு பெண்ணை இச்சையுடன் பார்த்தால் அவளோடு விபச்சாரம் செய்ததற்கு சமம்,
காதலன்/காதலி உனக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று ஒருவருக்கொருவர் சொல்லி பொய்யான வாழ்க்கை வாழாதே என் ஏசு உன்னை உண்மையாக நேசிக்கிறார் மகனே மகளே காதல் என்ற இச்சைக்குள் இனங்காதே அழைக்கிறார் என் ஏசு.
என்று வேத புத்தகத்தில் இருப்பதை மேற்கோள் காட்டி பல கிறிஸ்த்தவ நண்பர்கள் பதிவிட்டிருந்தார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை இச்சை என்றொன்று இல்லை எனில் மனிதர்களாகிய எச்சம் எப்படி இவ்வுலகில் பழுகி பெறுகி இருக்கும்?
ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு கலாச்சாரம் அதன்படி கிறிஸ்த்தவ மதம் உருவான நாட்டில் இத்தகைய கோட்பாடு இருந்திருக்களாம்.
அதையே உளக தத்துவ வாசகமாக ஏன் நாம் ஏற்கவேண்டும்.
உலகமெங்கும் நம் திருக்குறள் பறவிக்கிடக்கிறது ஆனால் பிறநாட்டவர் அதை அதில் உள்ளபடியே பின்பற்றுவார்களா எனில் கேள்விக்குறிதான்...?
பல அயல் நாட்டு எழுத்தாளர்கள் நம்மை Barbarism - காட்டுநிலைப்புபண்பு, நாகரிகமற்ற வாழ்க்கை, காட்டுமிராண்டி வாழ்க்கை, முரட்டுத்தனமான நடத்தை, தாய்மொழிச் சொல்லை நீக்கி அயல்மொழிச் சொல்லைப் பயன் படுத்துதல்.
Barbarian - காட்டுமிராண்டி, நாகரிகமில்லாதவர், பண்பற்றவர், கிரேக்க வழக்கில் அயல்நாட்டான், (பெ) காட்டு மிராண்டித்தனமான, முரட்டுத் தன்மையுடைய.
இவ்வாறாக புணைந்தெழுதித்தள்ளுகிறார்கள்.
அவர்களது வசை புணைவிற்கேற்ப நாமும் இசைந்தாடுவதே நிதர்சனம்.
எவனோ விட்டுவிட்டுப்போன புத்தகம் மெய்யாய்ப்போனது நம் இலக்கியங்களும் நம் மரபுவழி பாரம்பரியங்களும் அவர்களால் பொய்யாய்ப்போனது.
இன்னும் ஒன்று வேடிக்கையாய் சொல்வதென்றால் அயலவன் நம்மை பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டு  ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் காட்டு என்று பைபிள் வாசகங்களை போதித்து அடிமை முட்டால்களாக ஆக்கிவிட்டு சென்றுவிட்டான்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இங்கு வந்த இஸ்லாமியனுக்கும், இந்திய பூர்வீக குடிமக்கலுக்கும் இடையே பசுவை பகடையாக்கி பந்தாடிவிட்டுப்போனான்.
அந்த பந்து இன்னும் இங்கு உருண்டுகொண்டே இருக்கிறது. பலர் அதை உதைத்தாடி வெந்து, நொந்தும்போனது.
ஆ...!
இப்படி எவனோ விதைத்த வாசகம் எதெதெற்கோ பயன்படுகிறது அப்படியே நாம் கண்டுகொள்ளாமல்போனால் நம் திருவாசகம் மறைந்துபோகுமோ என்ற ஐய்யம் எழுகிறது.
பிறகு காதல் மட்டும் விதிவிலக்கா என்ன...
பிரிட்டிஷ் காரன் 415 ஆண்டுகளுக்கு முன் வந்து நம் செல்வங்களை எல்லாம் அளித்து அவனுக்கு வேண்டிய ஆதாயத்தை தேடிக்கொண்டு போய்விட்டான்.
கிறிஸ்த்தவ வேத புத்தகம் யவரோ ஒருவர் ஆதாயம் பெறுவதற்காக யவரோ ஒருவரால் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்பதை இன்று சில படித்த அறிவு கொழுந்துகள் கூட புறிந்துகொள்ளவில்லையே என்பதை எண்ணிப்பார்க்கும்போது நகையும் இழிவும் மட்டுமே உச்சம்.
கல்லை வணங்காதே என்று வாய் கூசாமல் கொக்கரிக்கும் உங்களுக்கு அந்த கல்லுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் விஞ்ஞாண ரகசியம் என்ன தெரியும்?
எதையும் குற்றம் சொல்லாமல் போதிப்பது உண்மையான கொள்கை அதைவிடுத்து நா கூசாமல் எடுத்ததெல்லாம் பொய் என்று உங்கள் கிறிஸ்தவ கோட்பாடுகளையே கிறிஸ்தவர்களாகிய நீங்கள் அவமதிக்கிறீர்கள்.
2 வருடத்திற்கு முன் ஒரு பிரபள கிறிஸ்த்தவ ஊலியர் ஒரு பயங்கற அற்புதத்தை நிகழ்த்தினாற்.
ஒரு 14 வயது சிறுவன் அவனுக்கு பிறவியில் இருந்தே பார்வை தெரியாது அந்த பய்யனை அழைத்து ஜெபித்து  கண் தெரியவைத்துவிட்டார் உடனே அவன் பைபிலில் உள்ள வசனத்தை படிக்கிறான்
சிருவயதில் இருந்தே அ ஆ எப்படி இருக்கும் என்பதே தெரியாத அவனால் எப்படி அந்த பைபிலின் வசனத்தை படிக்கமுடிந்தது?
அதற்கடுத்து ஒரு பாட்டி எழுந்து வருகிறது ஊலியர் மேடையிலிருந்து தன் கை குட்டையை வீசுகிறார் அதை எடுத்து அந்த பாட்டி தன் காதுகளில் வைத்து எடுக்கிறது உடனே காது கேட்டுவிட்டதாம்.
அந்த காணொளியை பார்க்கும்போது சிரிக்க வைக்க வடிவேல் தேவை இல்லை அப்படி ஒரு சிரிப்பு.
ஏன் இந்த வேஷம்?
எதற்கு இந்த கோஷம்?
இப்படியே போனால் முட்டால்களின் பூமியாகிவிடும்போல.
எது எப்படியோ நாம் இழந்துகொண்டிருக்கும் மரபுவழி சடங்குகள், பாரம்பரிய கலைகள் போன்றவற்றிற்கு 30% இந்த கிறிஸ்தவ பொய் பிரச்சாரங்கள் காரணம், 30% நமது அறியாமை காரணம், 40% மிஞ்சிக்கிடக்கிறது நம் மரபுவழி பாரம்பரிய சடங்குகளும் கலைகளும்.
நாம் சுயநலவாதிகளாய் இருக்கிறோம் என்பதை அவ்வப்போது நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும்.
பல ஆண்டுகளாக நம் மூதாதயர்கள் கட்டிக்காத்து நமக்கு விட்டுச்சென்றதை இப்படி அழிய விட்டு வேடிக்கைப்பார்ப்பதுதான் நாகரீகமோ?
எனது வாதம் இந்த மத த்தின் கொள்கைகளை சாடுவதல்ல
அதன் விளைவாக இழந்த நம் பாரம்பரியம் மீட்டெடுக்கப்படவேண்டும் என்பதே.
யவரும் இதற்கு எதிர்வாதம் இடுவதற்க்காக பல அயல் நாட்டு நூல் வாசகங்களை மேற்கோள் காட்டி விதன்டாவாதம் செய்வதாக இருந்தால் எந்த வகையிலும் இதற்கு பொருந்தாத விதன்டாவாதமாகவே கருதுவேன்.
நமக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொள்ளவேண்டும் தேவையில்லாதவற்றை ஏற்றுக்கொள்ளத்தேவையும் அவசியமன்று.
நம் தமிழ் சமுக வாழ்க்கையோடு பல ஆயிரம் ஆண்டுகளாக பின்னிப்பினைந்த ஆல விழுது இந்த காதல்...!
காதலும் பொய்யன்று, கருமமும் பொய்யன்று இதை பொய்யென்று மெய்ப்பிக்க இந்த கிறிஸ்தவ வாசகங்களும் பொய்யன்று.
ஆனால் அதைச்சொல்லி தன்னை நல்ல பகவான்களாக பாவிக்கும் யவரும் இச்சைக்கு இனங்காதவருமல்ல சர்ச்சைக்குள் அடங்காதவருமல்ல...!


No comments:

Post a Comment