Friday, 12 May 2017

யார்?மூடன். எழுத்து திபா


  

எழுத முனைந்த நாள் 16 11 2015.


நாந் கண்ட கணவில் தோன்றியவற்றைக்கண்டு இந்த கட்டுரையை எழுதுகிறேன்
கணவில் எனக்கு 93 வயது ஏதோ நான் இன்று காணாத வித்யாசமான படுக்கும் கட்டில் அது மெல்ல மேலும் கீழும் இந்த பக்கம் அந்த பக்கம் என்று அசைகிறது அதில் நான் அமர்ந்து ஒரு டானிக் பாட்டிலில் உள்ள மூடிபோன்று ஒரு சிறிய கப்பில் டீ போன்று ஏதோ குடித்துக்கொண்டிருக்கிறேன்.
நான் இருக்கும் அரை ஒரே புழுக்கமாக இருக்கிறது, எனக்கு அறுகில் மூன்று பெண்கள் ஏதோ முனுமுனுவென்று அவர்கள் காதுக்குமட்டும் கேட்கும்படியாக பேசுகிறார்கள், அதில் ஒன்றிரண்டு என் காதுக்கு கேட்டது. ஆளாலுக்கு குண்டுபோடுகிறார்கள் இன்று வந்து விலுந்தது ஆத்தூர் பக்கமாம்மே இன்னும் ஒரு வாரத்துக்குள்ள வெளிநாட்டுக்காரங்க இங்க வந்துடுவாங்களாமே அவங்க வந்தா நாம ரெண்டு கையையும் தூக்கினா நம்மல அவங்க ஒன்னும் செய்யமாட்டாங்களாம் என்று அவர்களது முனுமுனுத்த பேச்சு சத்தம் என்காதுக்கு அரைகுறையாக கேட்க உடனே நான் எழமுடியாமல் எழுந்து என் காதை அவர்களண்டை கொண்டுபோக அவர்கள் என்ன தாத்தா ரெடியா இருக்கியா அவங்க வந்து உன்னை தூக்கிப்போயிடுவாங்களாம் என்று என் பேத்திகள் என்னை கேலி செய்ய தூரத்தில் ஏதோ பெறுத்த சத்தம் கேட்கிறது எனக்கு பயம் அய்யையோ நம்ம பேரம்பேத்திகளோட அழுஞ்சுபோகப்போரோமேடா இவ்வலவுதான் வாழ்க்கையா கடவுலே இதுலருந்து எப்படியாவது நானும் என் பேரப்பிள்ளைங்களும் தப்பிச்சிடனும் அப்பனே முருகா என்று வாயைத்திரக்க முயன்று பார்க்கிறேன் வாய் திரக்க முடியவில்லை காலை அசைத்துப்பார்க்கிறேன் காலையும் அசைக்கமுடியவில்லை ஓஓஓஓஓஓஓய் என்ற சத்தம் கொடுத்து தண்ணீர் ஃபில்ட்டர் இருக்கும் பலகையை ஒரு உதை உதைத்து கணவில் இருந்து விடுபட்டேன்.
அப்பாட நிம்மதி என்று எனக்குள் ஒரு பெரும் மூச்சு பாத்துக்கங்க.
இந்த கணவு மீண்டும் மீண்டும் என்னை தட்டி எழுப்பிக்கொண்டே இருந்தது
அதற்காக நான் தேர்வு செய்த தலைப்பு இந்த மூடன் யார்.

உலகில் தோன்றிய முதல் மனித இனமே நம் தமிழ் இனம்தான் என்பதை கற்றரிந்தவர்கள் கண்டு கூறிய நம் விளை மதிக்கமுடியாத வரலாற்று எச்சமும், உச்சமுமாகும்.
நம்மால் உருவாக்கப்பட்டதே நாம் வழிபடும் தெய்வங்களும், நம் பழம்பெரும் சடங்குகளும்.
பல மூலிகைகளைக்கொண்டு அக்காலத்தில் அப்படி தெய்வங்களை வழிபட பல சடங்குகளை வகுத்து பகுத்தாய்ந்து தொன்றுதொட்டு அச்சடங்குகளை மேற்கொண்டதால்தான் அவர்கள் நல்ல உடல் வாகையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும் பெற்று நோய்வாய்ப்படாமல் வாழ்ந்துவிட்டுப்போனார்கள். இதுவல்லவா மெய் ஞானம், பகுத்தரிவு, மருத்துவ அருவியல்?
இன்று நாம் கண்ட படைப்பை அன்று நம் முன்னோர் முன்பே கண்டு ஏட்டில் எழுதிவைத்துப்போனான். ஆனால் நாம் இன்றோ அவர்களை மூடன் என்கிறோம் அவர்கள் கண்டுசொன்னதை மூட நம்பிக்கை என்கிறோம்.
அவன் பொதுநலத்தை என்னி வாழ்ந்துவிட்டுப்போனான் நாம் நம் சுயநலம் கருதியே வாழ்கிறோம்.
பெறியார் என்ன உண்மையில் பகுத்தரிவு வாதியா?
வெளியே சாதிப்பாகுபாடுகளையும், மத வழிபாடுகளையும் எதிர்த்து குரல்கொடுத்தார். ஆனால் அவரை சுற்றியுள்ள நன்பர்களை பிராமணன், செட்டியார், முதலியார், நாயிடு, என்று அழைத்தாரே அது தவரல்லவா? மதங்களை எதிர்த்து குரல்கொடுத்தார் ஆனால் அவர் அரையிலேயே முதல் தெய்வமான பிள்ளையார் சிலைமட்டும் இருப்பது என்ன ஞாயம்?
பெரியாரையும் அவரது பகுத்தரிவை வசைபாடுவதும் எனது நோக்கமன்று அவரால் ஒருவகையில் நமது இந்துமத சடங்குகளும் பாரம்பரியமும் உடைந்துபோக இருந்தது இருப்பினும் அவ்வலவு வலிமையா என்ன அந்த தொண்டுக்கிழவனது பகுத்தரிவுப்போர்வாள் வீச்சு?
இருப்பினும் அந்த தமிழ் மூதாட்டனின் புகழ் என்றும் ஏடுகளில் அழியா ஓவியமாகவும், வர்ணமாகவும், சிர்ப்பமாகவும், சிதையாமல் இருப்பதன் பெருமையே நம் பெண்குலத்திற்கு குரல்கொடுத்து அவர்களது சுழிவையும், சூழலையும் மாற்றித்தந்த மகான் என்பதே இதுதான் இவரது பகுத்தாய்ந்த கொள்கையும்கூட. மேலும் இந்த பகுத்தரிவு கொள்கை குறித்த சிறு விவாதத்தை படித்துக்கொண்டிருக்கும் உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன் நீங்களே ஆய்வது நலம்.
நான் எனது கோட்டிற்குள் பயனிக்கிறேன்
இப்படி நம் மத சடங்குகள் கால மாற்றத்தால் அழிந்துகொண்டேபோவதை நாம் வேடிக்கைப்பார்ப்பது நலமன்று. உணவே மருந்து மருந்தே உணவு என்று வாழ்ந்த நம்மைக்கண்டு அயலவன் ஆழ்ந்துபோனான் நம் செல்வச்செழிப்பையும், நம் பிணி இல்லா வாழ்வுகுறித்த ரகசியத்தையும் அரிந்து அதை உடைத்தெரிந்து அவன் இட்ட மருந்தை உண்ணச்செய்து நாம் அரியாத புது நோய்களை உண்டாக்கி அதை குணப்படுத்த அவனது மருந்தையே கொடுத்து கூடவே இலவசமாக அவனது தெய்வ வழிபாடுகளையும் நம்மிடையே விதைத்து அந்த தெய்வத்தால்தான் நம் நோயும் பிணியும் அகன்றதாகக்கூறி மூளைச்சலவைச்செய்தவன்தான் அந்த அங்கிதரித்த குல்லாக்காரன்.
என்னதான் அடக்கினாலும் அடங்கும் இனமா நம் தமிழினம்?
நம்மை அடக்க ஒரு வழிகண்டான் முள்ளை எடுக்க முள்தான் வேண்டும் என்பதை தெளிவாக உணர்ந்த அந்த நீசந் அவன் ஆளுகைக்காக நம்மை அடக்க வீசிய ஆயுதம்தான் பைபுல். ஒரு கண்ணத்தில் அரைந்தால் மறுகண்ணத்தையும் காட்டு என்பதன் மரைமுக விளக்கம் இப்போது புறிகிறதா?
1615 ஆண்டுவாக்கிள் அதாவது 400 வருடத்திற்கு முன்பு இந்தியாவிற்குள் வர்த்தகம் செய்யவந்த பிரிட்டிஷ் காரன் ஐரோப்பியப்பகுதியில் இருந்து அனிதிரண்டு வந்த கிறிஸ்த்தவ பாதிரிகளை அனைபோட்டு தடுத்து நிருத்தி இந்தியாவிற்குள் தாம் காலூன்றி நிற்கும்வரை அவர்கள் எல்லோரும் பிரிட்டனில் கொள்கைகளைப்பரப்ப அனுமதி தந்து இந்தியாவிற்குள் வரவிடாமல் தடுக்கத்தீட்டிய ராஜ தந்திர ஒப்பந்தம் இவர்களுக்குள் நடந்தேரியது.
நம் இந்திய பிரஜையா என்ன எவனோ ஒருவன்தானே இந்த பாபர் வழிவந்த ஜகாங்கீர்? பிரிட்டிஷ் காரன் இந்தியாவிற்குள் வர்த்தகம் செய்ய பல வித்தைகளை காட்டி ஜகாங்கீரும் அனுமதி வழங்க தவழ்ந்துகொண்டிருந்த இந்த முதலைகள் காலூன்றி 1618ற்கு மேல் நாடெங்கும் வர்த்தக வியாபாரங்களில் ஈடுபட்டார்கள்.
வர்த்தகத்திற்காக காலடி எடுத்து வைத்த இந்த கிழக்கிந்திய கம்பெனி 1757இல் நடந்த பிளாசிப்போரின் மூலம் இந்தியாவில் திடமாக
காலூன்றி பல பகுதிகளை விஸ்த்தாரிக்கத்துவங்கினான் அவன் வசதிக்காக தந்தி, அச்சுக்கூடம், இரையில் போக்குவரத்து போன்றவற்றை ஏற்படுத்தினான்.
இன்று அதை நாம் அயல் நாட்டான் கொடுத்துப்போனதென்று தம்பட்டமடித்துக்கொண்டிருக்கிறோம் அவன் இந்த வசதிகளை இங்கு கொண்டுவராமல் இருந்திருந்தால் அதை விட புதிய கண்டுபிடிப்புகளை ஏற்படுத்தி இருப்போம் இது மனம் சார்ந்த உளவியல் கூறு.
இப்படி ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியும் தீராத குல்லாக்காரனுக்கு இந்தியா முழுவதையும் ஆட்சி செய்யவேண்டும் என்ற அவா வராமல் போகுமா என்ன?
அப்போது ஆண்ட மன்னர்களுக்கிடையே குழப்பங்களை விளைவித்து அவர்களுக்கிடையே சண்டையை ஏற்படுத்தி அதை தங்களுக்குச்சாதகமாக பயன்படுத்தி பல பகுதிகளை சூரையாடி வடபகுதியில் ஆண்ட துலுக்கனுக்கும், இந்துக்களுக்கும் பிரிவினையை ஏற்படுத்தி சண்டை மூட்டி வேடிக்கைபார்த்தவன்தான் இந்த பிரிட்டிஷ் வெள்ளைப்பன்றி.
இதை புறிந்துகொண்ட ஒரு சில மன்னர்களும் ரானிகளுமாக ஐதரலி, திப்பு சுல்த்தான், நானா சாகிப், தாத்தியா தோபே, ராவ் சாகிப், பன்டா நவாப், சாகர் மன்னன், காண்ப்பூர் ராஜா, குன்வர் சிங், ஜான்சி ரானி லக்ஷ்மிபாய் போன்றோர் கிலக்கிந்திய கம்பனிக்கெதிராக போர் கொடி தூக்கினர்.
அதன் விளைவாக வெள்ளையர்களை ஆட்டம் காணச்செய்த சிப்பாய் புரட்சி நடந்தேரியது இது நாம் வரலாற்றுக்குறிப்புகளில் கண்டறிந்ததே.
இதுவே இந்திய சுதந்திரப்போராட்டத்திற்கு தொடக்கப்புள்ளியாகும். பிரிட்டன் பேறரசையே ஆட்டம்காணச்செய்த வீரம் செறிந்த வரலாற்று சுவடு இந்த சிப்பாய் புறட்சி 1857ஆம் ஆண்டு நிகழ்ந்தேரியது.
1858 பிரிட்டன் ரானி விக்டோரியா மகா ரானி இந்தியாவும் பிரிட்டனுடைய காலனி ஆதிக்கப்பகுதியாகும் என்று பிரகடனம் ஒன்றை பிறப்பித்து மேலும் இந்தியாவில் காலூன்றிய தமது கிலக்கிந்திய கம்பனிக்கு தன்னிச்சையாக இயங்கும் உறிமை உண்டென்றும் கூறி அவர்களை மேலும் உட்சாக படுத்த கைகால் தெரியாமல் ஆட்டம்போட்டு சொகுசான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.
இதனிடையே பிரிட்டனில் கிறிஸ்த்தவ கொள்கைகளை பறப்பியதுபோதும் இந்தியா வரலாம் என்று இங்குள்ள பிரிட்டிஷார் தகவல் அனுப்ப அவர்களும் இங்கு கப்பலேறி மந்தை மந்தையாக வரத்துவங்கினர்.
அன்று வந்த அந்த வெள்ளை கரடிகளால்தான் இன்று நமது பழய பன்பாடுகள், பாரம்பரிய மரபுகள், பழம்பெரும் சடங்குகள் யாவும் 100க்கு 80% மரைந்துபோயின.
எப்படிப்பார்த்தாலும் அன்டை நாட்டானுக்கு நாம் செல்வச்செழிப்போடு வாழ்வது துளியளவும் பிடிக்கவில்லை என்பதுதான் ஆய்ந்த உண்மை.
இவனே நமக்குள் பாகுபாடுகளை விதைத்தவன், இன்றளவிலும் நாம் நம் மூதாதையர்களை மூடன் என்று சொல்ல பாடம் கற்பித்தவன்
சரி அடுத்த தலைப்புக்குள் வரேன்
அக்காலத்தில் துலுக்கன் மட்டும் லேசு பட்டவனா என்ன?
நம் நாட்டு பொன் பொருலுக்காக ஆசைப்பட்டு ஆயிரம் ஆண்டுக்கு முன்பே இங்கேயுள்ள பல கோயில்களை தகர்த்தெரிந்து செல்வங்களை அள்ளிச்சென்றவன்தான் இந்த திருடன். இதற்கு தைமோர், முகமது கோறி, முகமது கஜினி போன்றோர் முதன்மை உதாரணம்.
அன்று இவர்கள் இந்தியாவிற்குள் நுழைந்து செய்த அடாவடிதான் என்ன? ஆட்டம்தான் என்ன? யப்பா யப்பப்பா சொல்லிமாலாது
இதையும் உங்கள் விருப்பத்திற்கே விட்டுவிடுகிறேன் எழுத்தாளர் மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள் என்ற நூலை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
இருப்பினும் சில குறிப்புக்கள்.
இவர்கள் இந்தியாவிற்குள் நுழைந்து பல நகரங்களை கொள்ளையடித்து, எறித்து நாசமாக்கினார்கள். பிறகு முகமது கோறிக்குப்பின் வந்த தைமோர் என்பவன் அன்று செல்வச்செழிப்போடு திகழ்ந்த டெல்லியை நோக்கி படையெடுத்துச்சென்று அங்குள்ள பொன்னையும் பொருளையும் கொள்ளையடித்து டெல்லி நகரத்தயே அலங்கோலம் செய்து அங்குள்ள மக்களையெல்லாம் வெட்டி கொன்று குவித்து ஊரையே எறித்து கலியாட்டம் ஆடியும் தீராத அந்த கொடும்கோலனுக்கு வெறி தாளவில்லை போகும் வழியில் உள்ள இந்துக்கோயில்களையெல்லாம் இடித்து அங்குள்ள பொன்னையும் பொருலையும் லவட்டிக்கொண்டு பல யானைகள் மீதும் பல ஒட்டகங்கள் மீதும் ஏற்றிச்சென்றான்.
கஜினி முகமது என்பவனும் இதே யுக்தியைத்தான் கையாண்டான் வரும் வழியெல்லாம் பழம்பெரும் இந்துக்கோயில்களையும், பல நகரங்களையும் இடித்தெரிந்து அன்று இந்தியாவின் பிரசித்திபெற்ற கோயிலான சோமநாதர் கோயிலை இடித்து அங்குள்ள பொன் பொருட்களையெல்லாம் கலவாடிச்சென்ற கயவன்தான் இந்த முகமது கஜினி என்ற அறக்கன்.
அந்த கோயிலின் சிறப்பம்சமே அங்கு கருவறையில் உள்ள சிவலிங்கம் அந்தரத்தில் இருப்பதுபோன்று அமைத்ததுதான் ஆயிரம் ஆண்டிற்கு முன்பே காந்த ஈர்ப்பு விசையைப்பயன்படுத்தி இப்படியோர் அதிசய பிரம்மிப்பை நிகழ்த்தி கட்டிடக்கலையின் பிரம்மாக்களாக வாழ்ந்துபோனவன் நமது இந்தியன்...!
இதை எடுக்க முயன்றுபார்த்த முகமது கஜினி சில நிமிடம் வியந்துபோனானாம் எப்படி எந்தவித பிடிப்புமின்றி இப்படி அந்தரத்தில் உள்ளதென்று.
பிறகு சுற்றுச்சுவர்களை இடித்தபோது லிங்கம் அசையத்துவங்கியதாம் மேலும் முழுவதும் இடித்தவுடன் லிங்கமும் கீழே விழுந்துவிட்டதாம்.
படிப்பதற்கே எவ்வலவு ஆர்வமாக உள்ளது அக்காலத்தில் இப்படியெல்லாம் வாழ்ந்து வலர்ந்த கலைகள் இன்று மன்னோடு புதைந்துவிட்டதென்பதை நினைக்கும்போது.
இப்படியெல்லாம் நமது பல இந்துக்கோயில்களை இடித்து விளைமதிக்கமுடியாத வைர வைடூரியங்கள், பொன், பொருல் போன்றவற்றை கொள்ளையடித்து அள்ளிச்சென்றுவிட்டான் அன்றைய துலுக்கன்
ஆனால் இன்றோ அவனது ஒரு வழிபாட்டுத்தலம் இடிந்ததற்கு எவ்வலவு போராட்டம், எத்தனை வன்முறை.
புறிந்துகொள்ளவேண்டியது ஒன்றுமட்டும்தான் மனிதன் ஒன்றுபட்டு வாழ மனதில் தூசி தட்டுவதைவிட்டு பிறமத மாசை நீக்கி இந்தியனாக நல்ல இந்துவனாக வாழ்வதே சாலச்சிறந்தது.
நாம் ஏமாரவில்லை ஏமாற்றப்பட்டுக்கொண்டிரிக்கிறோம்.
விஞ்ஞானத்தைக்கொண்டு ஏமாற்றியவன் அயல் நாட்டான்,
மெய் ஞானத்தைக்கொண்டு உலகையே உருமாற்றியவன் தமிழ் நாட்டான்...!
உலகையே கைவிரலில் அடக்கிய இனமடா நம் தமிழினம் இதைவிட்டு எவனோ சொல்லித்தந்துபோன பிறமத மரபுகளையும், கொள்கைகளையும் அங்கி தரித்துக்கூவிக்கொண்டு தரிகெட்டு திரிவதேனடா?
இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து பின் வாழப்போகும் சந்ததியையும் கருத்தில்கொண்டு பல்வேறு வியூகங்களை வகுத்து பல ஏறிகளையும் நீர் நிலைகளையும், மரங்களையும் வலர்த்து உண்டாக்கி பல ஆண்டுகளுக்குமுன்பே வாழ்ந்து மரைந்த நம்மவன் மூடனா
சில நூறு ஆண்டிற்குப்பின்பு வந்து ஏற்றத்தாழ்வுக்குட்படுத்தி சாதியை கட்டமைத்து அவனது மதக்கொள்கைகளை புகுத்தி உன்னை மூடன் என்று சொன்ன யவனோ ஒரு அயல்நாட்டு மனிதன் மூடனா?
இன்று உன் வீட்டிற்கு பட்டா பத்திரம் போட சொல்லிக்கொடுத்தவன் இந்த அயலவன்.
இன்றளவும் அவனது சாதனைகளை முனுமுனுக்கச்செய்தவனும் இந்த அயலவன்.
நம் படைப்புக்களை விளைகொடுத்து வாங்கியவனும் இந்த அயலவன்.
இப்போது நாம் எப்போது கண்ணயர்வோம் என்று காத்துக்கொண்டிருந்து முதுகில் சுட துப்பாக்கிக்கு பாலீஸ் போட்டுக்கொண்டிருப்பவனும் இந்த அயலவன்.
நம்மை சீண்டிப்பார்ப்பதற்கு சீனா, இலங்கை, பாக்கீஸ்த்தான், போன்ற நாடுகளுக்கு கையறித்துக்கொண்டிருக்கின்றன.
அந்த பக்கம் இந்தியா பாக்கீஸ்த்தான் எல்லைப்பகுதியில் சில சீண்டல்களைச்செய்து வேடிக்கை காட்டுகிறான்.
இந்த பக்கம் சீனாவின் தூண்டுதலின் பெயரில் இலங்கைக்காரன் இந்திய மீனவர்களை சீண்டிப்பார்ப்பதில் முனைப்பைக்காட்டுகிறான்.
உள்ளே நாம் அடிக்கும் அரசியல் கூத்தைக்கண்டு இங்கிலாந்து நாட்டுக்காரன் சிறிக்கிறான்.
இந்த நாடுகளெல்லாம் மெல்லமெல்ல போர் கொடி துக்க ஆயத்தமாகிக்கொண்டிருப்பதை உற்றுநோக்கியவர்கள் அறிவார்.
அடப்போடா தினேஷ் என்னத்தையாவது சொல்லி குழப்பிவிட்டுடாதங்கிறீங்களா
சொல்வது என் கடமை சிந்திப்பது உங்கள் கடமை.
நன்றி.

No comments:

Post a Comment