Saturday, 30 May 2015

சங்க இலக்கிய பரத்தையர் வாழ்வியல் சிக்கலில் ஆளுமை நிலைப்பாடு

Title
சங்க இலக்கிய பரத்தையர் வாழ்வியல் சிக்கலில் ஆளுமை நிலைப்பாடு
Name and Adders
B. ARUN PRIYA, MADURAI KAMARAJ UNIVERSITY, PALGALAI NAGAR, MADURAI – 21, TAMIL NADU, INDIA.
Presentation Type:
Oral
Objectives:
                மருதத் திணையின் ஊடலும் ஊடல் நிமித்தமும் என்பதான உரிப்பொருளுக்கே மிகுதியும், கருவியாக பரத்தையின் வாழ்வியல் அமைகின்றது. பரத்தமை என்ற தொழிலை மட்டும் வைத்துக் கொண்டு ஆய்வாளர்கள் பரத்தையைக் கொடும்;பரத்தை என்பதாகவும், தலைவன் தலைவியின் வாழ்வியல் சிக்கலாகவும் ஆய்ந்து வருகின்றனர். அதிலிருந்து வேறுபட்டு பரத்தையருக்கும், தலைவிக்கு ஒத்ததான அமைந்துள்ள சில குணங்கள் அமைகின்றதா? என்ற வினாவே இவ்வாய்வுக் கட்டுரையின் சிக்கலாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது.    
Methods:
 கட்டுரையின் எல்லைக் கருதியியும், கருத்துச் சுருக்கம் கருதியும் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பரிபாடல் ஆகிய நான்கு நூல்கள் மட்டும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
                சங்க இலக்கியப் பரத்தையர் வாழ்வியல் சிக்கலில் ஆளுமை நிலைப்பாடுஎன்கின்ற இவ்வாய்வுக் கட்டுரை மேற்கொள்ள, விளக்க முறைத் திறனாய்வு, உளவியல் திறனாய்வு, ஒப்பிட்டு முறைத் திறனாய்வு ஆகிய அணுகுமுறைகள் கையாளப்படுகின்றன.
Results:
வெளிநோக்கு முறை, அகநோக்கு முறை, இருநோக்கு முறை ஆகிய ஆளுமைக் கருவிகளை அளவு கோலாக்கிப் பரத்தையரின் உள்ளக் கிடக்கைகளை ஆழ்ந்து ஆய்ந்து பரத்தைக்கும் ஏற்படுதல், பிரிவுத் துயரால் உடல் மெலிதல், போன்றவைத் தலைவிக்கு ஏற்படும் உடல் வேறுபாடுகளும், அக உணர்வுகளும் ஏற்படுகின்றது. காதற்பரத்தைத் தலைவிக்கு இணையான ஓரிடத்தை வகிக்கிறாள். அதோடு தலைவன் தலைவி ஊடல் காலங்களில், தலைவியின் ஊடலை தணிக்கும் வகையால் மனம் அழிந்து சில அறக்கருத்துக்களை உரைப்பவளாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளாள். முன் கூறிய இவற்றையெல்லாம் விளக்கமாக ஆராய்வதே கட்டுரையின் பொருள் ஆகும்.
Conclusion:
சங்க இலக்கிய திணைக் (ஒழுக்கம்) கட்டமைப்பில் உள்ளடங்கிய உரிப்பொருள்களில் பரத்தை மிக உயர்ந்த இடம் பெறவில்லை. பரத்தமை என்ற தொழிலால் அத்தகையோர் கீழான இடத்தைப் பெற்றிருந்தாலும், ஒரு சில உள்ளத்து உணர்வுகளால் அவர்கள் சங்க இலக்கியங்களில் மேன்மை பெற்றிருக்க வேண்டும் என்பதனை ஆளுமைக் கருவிக்கொண்டு நிறுவிப்பதே இவ்வாய்வுக் கட்டுரையின் முடிவு ஆகும்.
     Keywords:
சங்க இலக்கியம் - பரத்தமை ஆளமை உரிப்பொருள் - வெளிநோக்கு அகநோக்கு - இருநோக்கு பிரிவு துயரம் - உடல் மெலிதல் - காதற்பரத்தை ஊடல் - அறக்கருத்துக்கள்.


No comments:

Post a Comment