செல்வி பா.அருண்பிரியா,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை.
தண்ணீர் தேசத்தின் ஃப்ராய்டிய தாக்கம்
முன்னுரை
விஞ்ஞானக் காப்பியம், கவிதை, புதினம் என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் தண்ணீர் தேசம் எனும் அறிவியல்
புதினம் கவிபேரரசு வைரமுத்து அவர்களால் தமிழ் கூறும் நல்லுலகிற்கு நல்கபட்டது.
இப்புதினத்தை ஆய்வு கண் கொண்டு ஆய்ந்து காணலாம். இச்சாளரங்கள் வழி உட்புகின் உள்ளே
பல விசாலமான ஆளுமை அறைகளும் அவற்றில் ஃப்ராய்டிய கூறுகளும் விரவி கிடக்கின்றன.
இல்லாளுமை என்னும் மிகப்பெரிய களத்தினின்று ஃப்ராய்டியத்தை மட்டும் முன்மொழிவதாக
அமைகிறது இவ்வாய்வு கட்டுரை.
தண்ணீர் தேச புதினக்குறிப்புகள்
‘தண்ணீர் தேசம்’ 1996ஆம் ஆண்டு வைரமுத்துவால் எழுதப்பட்ட
அறிவியல் புதினமாகும். இந்நூல் கலைஞர் மு.கருணாநிதியின் முன்னிலையில்
வெளியிடப்பட்ட பெருமைக்குரியது. மீனவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை விவரிக்கும்
புதினம் இதுவாகும்.
தமிழ்ரோஜா புதினத்தின் தலைவியாகவும், கலைவண்ணம் புதினத்தின் தலைவனாகவும் வருகின்றனர். இருவரும் காதலர்கள்
இருவரும் மீனவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை விவரிக்கும் புதினம் இதுவாகும்.
தமிழ்ரோஜா புதினத்தின் தலைவியாகவும், கலைவண்ணம் புதினத்தின் தலைவனாகவும் வருகின்றனர். இருவரும் காலர்கள்
இருவரும் மீனவர் சிலரின் அன்பான அழைப்பை ஏற்று, படகில் கடலுக்குள் செல்கின்றனர். கடலுக்குள் ஒரு குறிப்பிட்ட
தூரத்தில் படகு இயந்திரக் கோளாறு காரணமாக நின்று விடுகிறது. நீரச்சம் கொண்ட தமிழ்ரோஜாவுக்கு
உயிர் அச்சம் வந்துவிடுகிறது. அவள் தன்னுணர்வை இழக்கிறாள். அவள் தன்னுணர்வை
இழக்கிறாள். அந்நேரத்தில் கடலுக்கு நடுவில் புயலும் வந்து சேர, இறுதியில் காதலர்களும், மீனவர்களும்
அரசாங்கத்தால் மீட்கப்படுவதாகப் புதினம் நிறைவடைகிறது.
ஆளுமை விளக்கம்
‘Pநசளழயெடவைல’ என்னும் சொல் ‘Pநசளழயெ’ எனும் இலத்தீன் மொழிச்சொல்லிலிருந்து
பிறந்ததாகும். அச்சொல்லின் பொருள் ‘முகமூடி’ என்பதாகும்.
ஆளுமை என்பது தனிமனிதருடைய எண்ணங்கள்,
செயற்படும் முறை, நடத்தைகள், பிறருடன் பழகும் முறை, மனப்பான்மைகள், வாழ்க்கைத் தத்துவம், அறிவாற்றல், உணர்ச்சிகள் ஆகிய யாவும் சேர்ந்த
தொகுப்பிலிருந்து அவனுக்கு ஏற்படும் தனித்தன்மை ஆளுமை எனப்படும். மனிதனுடைய “உடல் தோற்றமும் அவன் உடைப்பாணியும் நடையும் அவனிடம் காணப்படும் அன்பு,
பொறாமை, ஊக்கம், அச்சம், இரக்கம், நன்றியுணர்வு, தந்திரம் போன்ற பலவிதமான பண்புகளும் அவனுடைய ஆளுமையில் அடங்கும்”1 என்று ஆளுமை குறித்து உளவியலாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
ஃபிராய்டிய சிந்தனைகள்
சிக்மண்ட் ஃப்ராய்ட் உளப்பகுப்பாய்வுக் கொள்கையைத் தோற்றுவித்தார்.
ஃபிராய்டின் கொள்கையைச் சிறப்பிப்பதாக “உளப்பாகுப்பாய்வுத்
திறனாய்வென்பது திறந்திருக்கும் கதலைச் சுட்டிக்காட்டி இக்கதவு திறக்கிறது என்று
கூறுவதல்ல. மாறாகப் பூட்டியிருக்கும் கதலைப் பிராய்டியச் சாவி கொண்டு திறந்து
காட்டுவதாகும்”2 என்னும் அரஙக நலங்கிள்ளியின் கருத்து
அமைகிறது.
உளப்பகுப்பாய்வுக் கொள்கையின்
அடிப்படைக் கருத்துக்கள் பின்வருமாறு,
மனித நடத்தையின் இயல்பினையும், போக்கினையும் நிர்ணயிப்பதில் அவனது நனவிலி உள்ளம் பெரும்பங்கு
கொள்கிறது.
நனவிலி உள்ளத்தில் நேரடியாக ஒருவரால் உணர முடியாத பல்வேறு எண்ணங்கள்,
எழுச்சிகள், நோக்கங்கள், அனுபவங்கள், விருப்பங்கள் ஆகியன மறைந்துள்ளன. இவை, பெரும்பாலும் நனவு நிலையிலிருந்து நனவிலி நிலைக்கும்
நசுக்கப்பட்டவனவாகும்.
ஃப்ராய்டின் உளப்பகுப்புக் கொள்கைப்படி
மனிதர்களின் மனம்
1. துய்ப்பு மனம் - 10
2. செயற்பாட்டு மனம் (அ) தன்முனைப்பு – ‘நுபழ’
3. நெறி மனம் - ளுரிநச நுபழ
என்று மூன்று நிலைகளாகப் பகுக்கப்படுகின்றது.
துய்ப்பு மனம் - (ஐனு – ஐளெவiரெஉவரயட னுசiஎநள)
மனித மனத்தின் முக்கியக் கூறுகள் பல இருப்பினும் அவற்றுள்
முதன்மையானது ‘இட்’ ஆகும். மனித மனத்தின் தலைமைப் பகுதியாகும். தேவை (நேநன)இ வேண்டல்
(றுயவெ)இ உணர்வெழுச்சி (நுஅழவழைn)இ துடிப்பு (நுஅpரடளந)இ செயல் (யுஉவழைn)இ இன்பம் (Pடநயளரசந)இ வேட்கை (னுநளசைந)இ விசை (குழசஉந)இ உந்தல் (னுசiஎந)இ விழைவு (றுiளா)இ முனைப்பு (ருசபந) ஆகிய அனைத்தும்
துய்ப்பு மனத்துடன் தொடர்புடையன.
“இட், விலங்கியல் மனம் எனப்படும். இதில்
அடங்கிய இச்சைகள், தேவைகள் அனைத்தும் உடனடியாக
கீழ்த்தரமான மகிழ்ச்சி பெறுதலை நோக்கமாகக் கொண்டவை. சூழ்நிலையின் உண்மை நிலையைப்
பற்றிஅ வை கவலைப்படுவதில்லை”3 தண்ணீர் தேசத்தில் கடலுக்குள் சென்ற
மீனவர்களைக் காணவில்லை. ஆனால், அரசாங்கம் நடவடிக்கைகளைத் துரிதமாக
எடுக்கவில்லை என்ற கோபத்தில் மீனவர்கள்
சிலர் செய்கின்ற செயலின் மூலம் துய்ப்பு மனநிலை வெளிப்படுகிறது.
இதனை,
“நாங்கள் யாருடைய உத்திரவுக்காகவும்
காத்திருப்பதில்லை’ – சீறிய இளைஞர்
கூட்டம் படபடவென்று படகுகளுக்குள்
குதித்துப் பரவியது
ஒரு கோபக்கார இளைஞன் டீசல் கலத்தின்
மூடியை உடைத்துத் திறந்தான்
ஒரு தீக்குச்சி கொளுத்திப் படகுக்குள்
வீசியெறிந்து வெளியே குதித்தான்
அடுத்த பத்தாவது நமிடத்தில் அதனை
படகுகளில் பற்றிப் பரவியது நெருப்பு”
(த.தே. – பக் 276 – 277)
என்று புதின வரிகள் புலப்படுத்துகின்றன. மீனவர்களை மீட்டு வருவதற்காக
ஒரு படகு செல்லவில்லை என்பதற்காக, அங்கிருக்கும் மொத்த படகுகளையும் தீ
வைத்து அழிக்கின்ற இளைஞர்களின் செயல் துய்ப்பு மனநிலையை வெளிப்படுத்துகின்றது.
செயற்பாட்டு மனம் - நுபழ
செயற்பாட்டு மனம் எனப்படும் ஈகோ
குழந்தை பிறந்த உடனேயே தோன்றவதில்லை. குழந்தை வளரும் சூழ்நிலையில் உண்மை நிலைகளுடன்
நடத்தைப் பொருந்திப் போக வேண்டிய தேவையின் காரணமாகவே ஈகோ எழுகிறது. எனவே, இதன் செயல்கள் உண்மைநிலைக் கொள்கையைச் சார்ந்து அமைபவை.
தண்ணீர்தேசத்தில் மீனவர்களெல்லாம்
தாங்கள் மீட்க்கப்பட வேண்டுமென்று கருதி கடிதமெழுதி அதைப் புட்டிக்குள் அடைத்துக்
கடலில் வீசுகிறார்கள். அது ஒரு இளைஞன் கையில் கிடைக்கிறது. ஆனால், அவனுடன் இருக்கும் முதியவரோ அதை கடலிலேயே மீண்டும் வீசிவிடச்
சொல்கிறார். அந்நிலையில் அவரது மனம் செயல்படும் விதத்தை,
“மனிதர்களில் குரங்குகள் உண்டு,
தங்கக் கிண்ணத்தோடு அப்பம்
கிடைத்தாலும்
அப்பம் கவர்ந்து கொண்டு தங்கக்
கிண்ணத்தைத்
தரையில் எறிந்து விடும் குரங்கு
மனிதர்கள்” (த.தே. – ப.257)
என்னும் புதினம் வரிகள்
புலப்படுத்துகின்றன. கடிதப்புட்டியை எடுக்க வேண்டுமென்று இளைஞர் மனம் சொல்கிறது. ‘வேண்டாம் வீசி எறி’ முதியவர் சொல் தடுக்கிறது. வேண்டுமா
வேண்டமா என்று குழப்பத்திற்கிடையே அவன் யோசிக்காமலே வீசி எறிந்து விடுகிறான்.
அந்நிகழ்வுதான் மனிதர்களின் ஈகோ ஆகும். இதனை,
“ஒரு கண நேரத்தில் ஒரே ஒரு கருத்து வெளிப்பாடு நிகழும் அளவிலான
குறுகிய வாயில் கொண்டது ஈகோ”4 என்ற தி.கு.ரவிச்சந்திரனின் கூற்று
உறுதிப்படுத்துகிறது.
நெறிமனம் (ளுரிநச நுபழ)
சூப்பர் ஈகோ என்னும் நெறிமனமானது நீதி, மனச்சாட்சி போன்ற கூறுகளைக் கொண்டது. இது நீதியின் மதிப்புகளால்,
தீர்ப்புகளால் உருவாக்கப்பட்டது.
“சூப்பர் ஈகோவை நீதிபதி (துரனபந)இ தணிக்கை (ஊநளெழச)இ மனச்சாட்சி
(ஊழளெழைரள) ஆகியவற்றுடன் தொடர்புபடுத்திப் பேசுவர்”5 என்று தி.கு.ரவிச்சந்திரன் மொழிகிறார்.
தண்ணீர் தேசத்தில் உணவைத் திருடியதாகப் படகில் உள்ள ஐவரும் சலீமைச்
சந்தேகிக்க அந்தச் சூழ்நிலையில் வரும் கவிஞரின் கூற்று மனிதரின் நெறிமான நிலையை
வெளிப்படுத்துகின்றது. இதனை,
“ஒரு திருடன் - ஒரு பிச்சைக்காரன்
ஒரு விலைமகள் - ஒரு கொலைகாரன்
இந்த நால்வரும் அற்ற சமுதாயம் தானே
இந்த உலகம் கடைவிழியில் நீர்வடியக்
கண்டு வரும் கனவு” (த.தே. – பக். 252-253)
என்ற ஆசிரியரின் கூற்று
வெளிப்படுத்துகிறது.
ஒரு சமுதாயம் முன்னேறுவதற்கு வழிமுறைகள் இதுலா, அதுலா என்று குழப்பமில்லாமல் திருடன், பிச்சைக்காரன், விலைமகள், கொலைகாரன் இந்த நால்வரும் இல்லாத சமுதாயமே நல்ல சமுதாயம் என்கிறார்
ஆசிரியர் இக்கருத்தைக் கூறும் போது ஆசிரியர் ஒரு நீதிபதி போல் தணிக்கை செய்து
கூறுவதால் இது நெறிமனமாகிறது.
பொதுவான சில ஃப்ராய்டிய கூறுகள்
உளபகுப்பு கொள்கைய தவிர இன்னும் சில ஆளுமை கூறுகளையும் சிக்மண்ட்
ஃப்ராய்ட் வரையறுத்திருக்கிறார். அவையும் தண்ணீர் தேசத்தில் பரவலாக
காணக்கிடைக்கின்றன.
தண்ணீர் தேசத்தில் இசக்கி என்ற கதை மாந்தர் தன் தாய் மீது கொண்ட அதீத
பற்றின் வழி ஒடிப்பஸ் மனவுணர்வின் சாயல் வெளிப்படுகிறது.
தமிழ்ரோஜா என்ற கதைமாந்தர் மீது அவர் தந்தை கொண்ட பற்று
எலக்ரோசிக்கலுக்கு முன் ஒரு சிறு மெல்லிய திரை இடுகிறது.
சலீம் என்ற கதைமாந்தர் வழி நனவிலி மனத்தில் மறைக்கப்பட்ட சில
முறையற்ற ஆசைகள் சமுதாய மாந்தர் மனசாட்யின் குறியீடாக பிரதிபலிக்கிறது.
இப்படி பல ஃபிராய்டிய கூறுகள் தண்ணீர்
தேசத்தில் ஆங்காங்கே விரவி கிடக்கின்றன.
முடிவுரை
நவீன உளவியலின் தந்தை என்று கருதப்படும் சிக்மெண்ட் ஃப்ராய்ட் மனித
சமுதாயத்தின் நடத்தைகளை ஆராயும் சில கொள்கைகளை வகுத்தளித்தார். அதன்படி தண்ணீர்
தேசத்தில் அவரது கொள்கைகள் கூடாடுகின்ற விதத்தினை இக்கட்டுரை தெளிவாக பதிவு
செய்கிறது. அதே சமயம் ஃப்ராய்ட் அவர்களின் ஆளுமை சிந்தனைகள் எல்லா மனித
செய்கைக்கும் பொருந்துபவை ஆகையால் தண்ணீர் தேசம் உட்பட எல்லாப் புதினங்களுமே
ஃப்ராய்டிய சிந்தனைக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு செய்ய உரியது என்பது பொதுவான
உண்மை.
பார்வை நூல்கள்
1. நா.பாலுசாமி (தொ.ஆ), வாழ்வியற் களஞ்சியம், தொகுதி – 2, ப.678
2. அரங்க நலங்கிள்ளி, இலக்கியமும் உளப்பாகுப்பாய்வும்,
ப.13
3. கி.நாகராஜன், கல்வி உளவியல், ப.410
4. தி.கு.ரவிச்சந்திரன், உளப்பகுப்பாய்வு அறிவியல், ப.255
No comments:
Post a Comment