தாஜ்மஹால்
ஓ தாஜ்மஹாலே...!
பணக்கார காதலனின் பகட்டுப்பெருமை நீ!
ஏழைக் காதலர்களுக்கு எட்டா கனவு நீ...
மன்வேட்டி எல்லாம் தூரிகையாக பிறந்த பளிங்கி ஓவியம் நீ!
தூரிகைகலேல்லாம் உளியாக உயர்ந்த உன்னத சிற்பம் நீ!
இந்தியாவில் அன்று எழுந்த வெள்ளை மாளிகை நீ!
இறந்த உடல்களின் இதையத்துடிப்பு நீ...
அழகின் உயரம் சொல்லும் அதிசயம் நீ!
அன்பின் ஆழம் சொல்லும் ஆச்சரியம் நீ...
உலகத்தில் உள்ள எல்லாக்காதளுக்கும் ஒரு கேள்விக்குறி நீ?
உலகத்தில் உள்ள எல்லாக்காதலர்களுக்கும் ஆச்சர்யக்குறி நீ...!
நீ, நீ எல்லாம் நீ
ஆனால் காதல் மட்டும் இல்லை என்றால் வெறும் கல்லறைதான் நீ..........
#அபி.
பா. அருண்பிரியா அரசு முதுகளை தமிழ் ஆசிரியை.
No comments:
Post a Comment