Monday, 18 August 2014

எம் எஸ் வேர்டிற்கான ஷார்ட்கட் கீ தொகுப்புகள்

எம் எஸ் வேர்டிற்கான ஷார்ட்கட் கீ தொகுப்புகள்

வேர்ட் தொகுப்பிற்கான ஷார்ட்கட் கீ தொகுப்புகள் பல இருந்தாலும்,
சில அதிகம் பயன்படுத்தப்படுவதாகவும், சில சிக்கல்களுடன் அமைந்ததாகவும்,
சில அதிகப் பயன் தருவதாக இருந்தாலும் அவ்வளவாகப்
பயன்படுத்தப்படாதவையாகவும் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1. Shift + F3: இந்த கீ தொகுப்பு ஆங்கில எழுத்துக்களின் முதல் எழுத்தையோ
அல்லது மற்றவற்றையோ, மூன்று வகைகளில் பெரிய எழுத்தாக மாற்றும் வசதியைத்
தருகிறது. இது நம் நேரத்தினை மிச்சப்படுத்துவதாக இருந்தாலும், சில
சிக்கல்களையும் இணைத்துள்ளது. பெரிய எழுத்து தேவைப்படாத சொற்களிலும்,
முதல் எழுத்தினைப் பெரிய எழுத்தாக மாற்றுகிறது.

2. Ctrl + Shift + N: வழக்கமான ஸ்டைவழங்குகிறது. மற்றவர்களின் ஆவணங்களைப் பயன்படுத்துகையில், அவர்கள்
பயன்படுத்திய பார்மட்டிங் அமைப்புகள் நமக்குத் தேவைப்படாததாகவும், சில
வேளைகளில் எரிச்சல் ஊட்டுவதாகவும் அமையும். குறிப்பாக, இணைய
தளங்களிலிருந்து நாம் டெக்ஸ்ட்களைக் காப்பி செய்து பேஸ்ட் செய்கையில்
இந்த சிரமம் ஏற்படும். அப்போரண ஸ்டைலில் டெக்ஸ்ட்டை அமைக்க இந்த
ஷார்ட்கட் கீ தொகுப்பு நமக்கு பயன்படுகிறது. இது பலர் அடிக்கடி
பயன்படுத்தாத கீ தொகுப்பாகும்.

3. Ctrl + Shift + C: தேர்ந்தெடுக்கப்பட்டு காப்பி செய்யப்படும்டெக்ஸ்ட்டினை, டெக்ஸ்ட்டோடு அதன் பார்மட்டினையும் சேர்த்து காப்பி
செய்திட உதவும் ஷார்ட் கட் கீ தொகுப்பு. இந்த கீ தொகுப்பினைப்
பயன்படுத்தி டெக்ஸ்ட் டைக் காப்பி செய்தவுடன், எந்த இடத்தில் அந்த
டெக்ஸ்ட்டினை ஒட்ட வேண்டுமோ, அங்கு சென்று Ctrl + Shift + V கொடுத்தால்
போதும். அங்கு பார்மட் அமைப்புடன் டெக்ஸ்ட் பேஸ்ட் செய்யப்படும். இதனை
பார்மட் பெயிண்டர் என்ற வசதி மூலமும் மேற்கொள்ளலாம். ஆனால் பார்மட்
பெயிண்டர், இந்த வேலை முடிந்தவுடன், அதனை மறந்துவிடும். ஆனால் இந்த
ஷார்ட் கட் கீ, நீங்கள் வேர்டை விட்டு வெளியேறும் வரை, பார்மட்டிங்
அமைப்பினை நினைவில் வைத்திருக்கும்.

4. Alt + F9: பீல்டு என்று சொல்லப்படும் குறியீடுகளை காட்டவும்
மறைக்கவும் செய்திடும் ஷார்ட்கட் கீ தொகுப்பு இது. பீல்டு கோடு
பயன்படுத்துபவர்களுக்கு ஒரு சிரமம் இருக்கும். எந்த சொற்கள் பீல்டு
குறியீடு பயன்படுத்தி அமைக்கப்பட்டது, எந்த சொற்கள் அவை இல்லாமல்
வழக்கமான முறையில் அமைக்கப்பட்டது எனத் தெரியாமல் தடுமாறுவார்கள்.
அவர்கள் இந்த ஷார்ட் கட் கீகளை அழுத்தி, மிக எளிதாக அவற்றைக் கண்டு
கொள்ளலாம்.

5. F4: இந்த கீயும் பலரால் அடிக்கடி பயன்படுத்தப்படாத, ஆனால் மிகப்
பயனுள்ள ஷார்ட்கட் கீ ஆகும். வேர்டில் ஒருமுறை மேற்கொண்ட செயலை, அடுத்து
அடுத்து மேற்கொள்ள, இந்த கீயினை அழுத்தினால் போதும். எடுத்துக்காட்டாக
ஒரு சொல்லினை சிகப்பு வண்ணத்தில் அமைக்க, அதனைத் தேர்ந்தெடுத்து வண்ணக்
கட்டம் பெற்று, சிகப்பு வண்ணத்தைக் கிளிக் செய்து அமைக்கிறீர்கள். இதே
போல, மற்ற இடங்களில் உள்ள சொல் அல்லது சொற்களைச் சிகப்பு வண்ணத்தில்
அமைக்க, அவற்றைத் தேர்ந்தெடுத்து, எப்4 கீ மட்டும் அழுத்தினால் போதும்.
அவையும் அவ்வாறே அமைக்கப்பட்டுவிடும். இது மட்டுமின்றி, அழித்தல்,
டெக்ஸ்ட் அமைத்தல், பேஸ்ட் செய்தல், பார்மட் அமைத்தல் என எந்த வேலையையும்
இந்த கீ தொடர்ந்து மேற்கொள்ள உதவுகிறது. டேபிளில் சில வரிசைகளை அடுத்த
அடுத்த இடத்தில் ஒட்ட வேண்டி இருந்தால், முதலில் ஓர் இடத்தில்
ஒட்டிவிட்டுப் பின்னர், ஒட்ட வேண்டிய இடத்தில் கர்சரை வைத்துக் கொண்டு
இந்த எப்4 கீயினை அழுத்தினால் போதும். வரிசைகள் ஒட்டப்படும்.

6. Ctrl + H: பைண்ட் அண்ட் ரீபிளேஸ் டயலாக் பாக்ஸினை, ரீபிளேஸ் டேப்பைத்
திறந்தபடி நம் பயன் பாட்டிற்குக் கொண்டு வரும். கண்ட்ரோல் + எப்
அழுத்தினால், இதே டயலாக் பாக்ஸ் பைண்ட் டேப்பில் திறந்தபடி நமக்குக்
கிடைக்கும். இதனையே தான் நாம் பயன்படுத்திப் பின்னர் ரீபிளேஸ் கட்டம்
செல்கிறோம். அதற்குப் பதிலாக இந்த ஷார்ட் கட் கீ தொகுப்பினையும்
பயன்படுத்தலாம்.

7. Ctrl அழுத்தியவாறே, ஏதேனும் ஒரு டெக்ஸ்ட் அல்லது ஆப்ஜெக்ட் ஒன்றினை
இழுப்பது: இந்த வேலையை மேற்கொண்டால், அந்த டெக்ஸ்ட் அல்லது ஆப்ஜெக்ட்
காப்பி செய்யப்படும். இது ஆப்ஜெக்ட் களுடன் பயன்படுத்த அதிகம் பயன்படும்.
ஏதேனும் ஒரு ஆப்ஜெக்ட் சரியற்ற முறையில், டெக்ஸ்ட்டுடன்
ஒட்டப்பட்டிருந்தால், இந்த கீ மற்றும் மவுஸ் பயன்படுத்தி, இழுத்து, அது
இருக்கும் இடத்தினைச் செம்மையாக வைத்திடலாம். நீங்கள் விருப்பப்படும்
இடத்தில், துல்லியமாக வைத்திட இந்த கீ முறை உதவும். கண்ட்ரோல் கீயினை
விடும் முன், படத்தை அல்லது டெக்ஸ்ட்டினை விட்டுவிட வேண்டும். இல்லை
எனில், வேர்ட் ஒரிஜினல் டெக்ஸ்ட் அல்லது படத்தைப் புதிய இடத்திற்கு
நகர்த்திவிடும்.
இதற்கு ஒரு போனஸ் தகவலும் உண்டு. இதனுடன் ஷிப்ட் கீயினையும் சேர்த்து
அழுத்தினால், வேர்ட் காப்பி செய்யப்படுவதனை, அதன் ஒரிஜினல் இருக்கும்
இடத்திற்கு நேராக அதே வகையில் அமைத்திடும்.

8. Ctrl + Q: பத்தி எனப்படும் பாரா ஒன்றில் செட் அப் செய்யப்பட்டதற்கும்
கூடுதலாக சில பார்மட்டிங் வகைகள் அமைக்கப் பட்டிருந்தால், மொத்த
பத்திக்குமாக அவை நீக்கப்பட இந்த கீகளைப் பயன்படுத்தலாம். அதாவது
டாகுமென்ட்டில் பாரா ஸ்டைல் என வரையறை செய்யப்பட்டவை தவிர, டாகுமெண்ட்டை
அமைத்தவர் தாமாக, ஏதேனும் பார்மட்டிங் அமைத்திருந்தால், இந்த கீகளைப்
பயன்படுத்தி அவற்றை நீக்கிவிடலாம்.

9. Ctrl + 0 (சுழியம் எனப்படும் சைபர்): கர்சர் அப்போது இருக்கும்
பாராவிற்கு முன்னால் 12 புள்ளி இடைவெளியினை அமைக்கும் அல்லது நீக்கும்.
டேபிள் ஒன்றில் இது அதிக பயன்பாட்டினைத் தரும். எடுத்துக்காட்டாக, டேபிள்
கட்டத்தோடு ஒட்டிப் போயிருக்கும் டெக்ஸ்ட்டினைத் தெளிவாக அமைப்பதற்கு,
இந்த ஷார்ட்கட் கீகளைப் பயன்படுத்தி எளிதாக அமைக்கலாம்.

1டெக்ஸ்ட் நெட்டுவாக்கில் தேர்ந்தெடுக்கப்படும். இது அவ்வளவாகப்
பயன்படுத்தப்படுவதில்லை என்றாலும், பலருக்கு இது அதிகப் பயன்களைத் தரும்.
ஆல்ட் கீயினை முதலில் அழுத்திக் கொண்டு, பின்னர் டெக்ஸ்ட்
தேர்ந்தெடுப்பதில் ஈடுபட வேண்டும். கீயை அழுத்திய பின், மவுஸால் நெட்டு
வாக்கில் இழுக்க வேண்டும். அதே போல மவுஸ் பட்டனை விடும் முன் ஆல்ட்
கீயினை விட்டுவிட வேண்டும். நெட்டு வாக்கில் இவ்வாறு தேர்ந்தெடுத்த
டெக்ஸ்ட் பகுதியில், மற்ற தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டில் என்ன எல்லாம்
மாற்றங்களை மேற்கொள்கிறோமோ, அவை அனைத்தையும் இந்த வகையிலும்
மேற்கொள்ளலாம்.மாற்றலாம். பிற வேலைகளையும் மேற்கொள்ளலாம்.

No comments:

Post a Comment