மாதவிடாய் வலியை வீட்டிலேயே குறைக்க
சில அருமையான வழிகள்
கடற்கரையில் காலாற நடப்பதும், எந்தக் கவலையும் இல்லாம் ஷாப்பிங் செய்வதும் மற்றும் மிகவும் பிடித்த
நண்பர்களுடன் ஒரு காபி சாப்பிடுவதும் ஒவ்வொரு பெண்ணும் விரும்பும் அற்புதமான
செயல்களாகும். ஆனால், மாதத்தின் சில நாட்கள் அவள்
சோர்வாகவும் மற்றும் தொய்வாகவும் இருப்பதைப் பற்றி அவள் என்ன நினைக்கிறாள்?
மாதவிடாய் சுழற்சியை அவள் அனுபவிக்கும் அந்த
நாட்களில் தான் அவளுடைய சுறுசுறுப்பு காணாமல் போயிருக்கும்.
சில நேரங்களில், இந்த சுழற்சியை கணிக்க முடியாமலும், தவறியும் கூட வரும். சில நாட்களில் 2 வாரங்கள் இடைவெளியும், வேறு சில
நாட்களில் 7 நாட்கள் இடைவெளியிலும் கூட இந்த 3 நாள் பிரச்சனையை பெண்கள் எதிர்கொள்கிறார்கள். இந்த 3 நாள் பிரச்சனையின் போது, பெண்கள்
கடுமையான தசைப்பிடிப்பை வயிற்றில் அனுபவிப்பார்கள்.
ப்ரோஸ்டாக்ளான்டின்ஸ் என்றழைக்கப்படும்
தொகுப்பு ஹார்மோன்களுடன் இருக்கும் கருப்பையின் சுவர்கள் கிழிவதால் மாதவிடாய்
தசைப்பிடிப்பு வலிகள் வருகின்றன. ப்ரோஸ்டாக்ளான்டின்ஸ்களும், வலியும் இணை பிரியாமல் ஒரே சமயத்தில் வருகின்றன. மேலும், பிரசவத்தின் போது வலியை வரவழைக்கும் பணியை செய்யும் முதன்மையான
காரணியாகவும் ப்ரோஸ்டாக்ளான்டின்ஸ் உள்ளன. இது மட்டுமல்லாமல் இரத்தம் இல்லாததாலும்,
தசைகள் உரசுவதாலும் கூட கருப்பையில் வலி
உண்டாகும்.
இவ்வாறு மாதவிடாய் காலத்தில் பெண்கள்
அனுபவிக்கும் வலியைக் குறைக்க உதவும் சில வழிமுறைகளைப் பற்றி இங்கு கொடுத்துள்ளோம்.
இவை பரிசோதிக்கப்பட்டு, பலன் தந்த வழிமுறைகளாகும்.
பால்
கால்சியம் நிறைந்திருக்கும் ஒரு கப்
பாலை உங்களுடைய காலை உணவுடன் சேர்த்துக் கொள்வதன் மூலம் வலியை எதிர்த்துப்
போராடவும் மற்றும் நிவாரணம் பெறவும் முடியும். நீங்கள் பால் குடிக்க
விரும்பாவிடில், மாதவிடாய் நாட்களில் கால்சியம்
மாத்திரைகளை சாப்பிட்டு நிவாரணம் பெறலாம்.
பப்பாளி
மாதவிடாய்க்கு முன்னதாக நீங்கள்
சாப்பிடும் உணவில் பப்பாளியை சேர்த்துக் கொள்ளுங்கள். பப்பாளியில் உள்ள பப்பாயின்
என்ற என்ஸைம், மாதவிடாய் வலிக்கு எதிராக திறனுடன்
போராடும். மாதவிடாய் நாட்களில் இரத்த ஓட்டத்தை மென்மையாகவும் மற்றும் எளிதாகவும்
இந்த என்ஸைம் மாற்றி விடும்.
கேரட்
கேரட் கண்களுக்கு மிகவும் நல்ல உணவாக
இருந்தாலும், மாதவிடாய் வலியை நீக்கவும் உதவுகிறது.
கேரட் ஜுஸை ஒரு கிளாஸ் தினமும் குடித்து வந்தால், முறையான இரத்த ஓட்டத்தைப் பெற முடியும் என்று மகப்பேறு மருத்துவர்கள்
பரிந்துரைக்கிறார்கள்.
கற்றாழை
உடலில் வரும் அனைத்து விதமான
பிரச்சனைகளுக்கும் நிவாரணியாக இருக்கும் கற்றாழை, மாதவிடாய் பிரச்சனைக்கும் மருந்து என்பதில் மாற்றுக் கருத்து
கிடையாது. கற்றாழைச் சாற்றில், ஒரு தேக்கரண்டி தேனைக் கலந்து
குடிப்பதன் மூலம் வலியில்லாத இரத்தப் போக்கை உருவாக்க முடியும்.
லாவெண்டர்
தன்னுடைய அமைதிப்படுத்தும் மற்றும்
ஆற்றுப்படுத்தும் குணத்திற்காக பெயர் பெற்றுள்ள மருந்தாக லாவெண்டர் உள்ளது.
மாதவிடாயின் போது லாவெண்டர் எண்ணெயை வயிற்றில் தடவினால், 10 முதல் 15 நிமிடங்களுக்குள் வலியைக் குறைத்திட
முடியும்.
ஓமம்
மாதவிடாயின் போது காஃபிக் அமிலம்
நிரம்பிய ஓமத்தை அதிகளவு சாப்பிடுவதன் மூலம், வலியிலிருந்து பெருமளவு நிவாரணம் பெற முடியும். ஓமத்தை மாசாலாக்கள்
மற்றும் மூலிகை தேநீரில் கலந்து குடிப்பதன் மூலம், ஆச்சரியப்படுத்தும் விதமான நிவாரணத்தைப் பெற்றிட முடியும்.
வெந்நீர் குளியல்
மேல் வயிறு மற்றும் அடி வயிற்றுப்
பகுதியில் அதிகளவு வெந்நீர் படும் வகையில் வெந்நீர் குளியல் போடவும். இதன் மூலம்
அந்த பகுதியின் இரத்த ஓட்டம் கட்டுப்படுத்தப்பட்டு, ஆற்றுப்படுத்திக் கொள்ள முடியும்.
இஞ்சி
மாதவிடாய் நாட்களில் வலியைக்
குறைக்கும் மருந்தாக இஞ்சியைப் பயன்படுத்த முடியும். அது மட்டுமல்லாமல், தவறி வரும் மாதவிடாய் சுழற்சியை வரைமுறைப்படுத்தவும் இஞ்சி உதவும்.
இஞ்சியை தேநீராக காய்ச்சி குடிப்பதன் மூலம் ஆச்சரியம் தரும் பலன்களை அடைய
முடியும்.
சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களை அதிகளவில்
சாப்பிடுவதன் மூலம் மாதவிடாய் நாட்களை வலியில்லாத நாட்களாக்கிட முடியும். ஏனவே,
சிட்ரஸ் பழங்களை ஜுஸாக்கி குடித்து வலியைக்
குறைத்திடுங்கள்
பெருஞ்சீரகம்
மாதவிடாய் நாட்களில் இரத்தம் குறைவாக
இருந்தால், அதனை நிவர்த்தி செய்யும் வகையில் கருப்பையின்
இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் ஆபத்பாந்தவனாக பெருஞ்சீரகம் உள்ளது. ஒரு கிளாஸ்
தண்ணீரில் பெருஞ்சீரகத்தை கொதிக்க வைத்து, நன்றாக கலக்கி,
குடிப்பதன் மூலம் வலியிலிருந்து நிவாரணம்
பெற்றிடுங்கள்.
உடற்பயிற்சி
தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வர
வேண்டியது மிகவும் முக்கியமாகும். பெரும்பாலான பெண்கள், குறிப்பாக சோர்வாக இருக்கும் வேளைகளில் அவர்கள் உடற்பயிற்சிகளை
செய்வதில்லை. இது தவறான அணுகுறையாகும். உடற்பயிற்சி செய்வதன் மூல் அடிவயிற்றுப்
பகுதியிலும், உடலின் பிற பகுதிகளிலும் இரத்த ஓட்டம்
சீரடைவதால், வலியை பெருமளவு குறைக்க முடியும்.
ஊட்டச்சத்து
போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாத
காரணத்தால் கூட மாதவிடாய் வலிகள் அதிகரிக்கக் கூடும் என்பதால், பெண்கள் அனைவரும் சரிவிகித உணவை துணைக்கு வைத்துக் கொள்ள வேண்டும்.
பழுப்பு அரிசியை சாப்பிடுவதன் மூலம் அதில் நிறைந்திருக்கும் பி6 வைட்டமின் பெண்களுக்கு கிடைக்கும், இதன் மூலம் வீக்கங்களைக் குறைத்திட முடியும். மாங்கனீசு சத்து
நிரம்பியுள்ள வால்நட்ஸ்கள் மற்றும் பரங்கிக்காய்களை சாப்பிடுவதன் மூலம்
தசைபிடிப்பிலிருந்து நிவாரணம் பெற முடியும்.
வேண்டாம் 'ஜங்க் ஃபுட்'
மாதவிடாய் நாட்களில் கடைகளில் விற்கும்
நொறுக்குத் தீனிகளுக்கு சொல்லுங்கள் மிகப்பெரிய 'நோ'. ஜங்க் உணவுகளான பர்கர்கள், பாஸ்தா போன்றவற்றை சாப்பிடாமல் நீங்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க
வேண்டியது அவசியமாகும். அதுமட்டுமல்லாமல், கார்பனேட்டட்
குளிர்பானங்களை குடிக்காமல் தவிர்க்க வேண்டியதும் அவசியமாகும்.
No comments:
Post a Comment