Monday, 18 August 2014

தாம்பத்திய உறவை உயிர்ப்போடு வைத்திருப்பது எப்படி? (வயதுவந்தோர் மட்டும்)



தாம்பத்திய உறவை உயிர்ப்போடு வைத்திருப்பது எப்படி? (வயதுவந்தோர் மட்டும்)

தம்பதிகளுக்கு இடையிலான படுக்கையறை உறவு கூட ஒரு கட்டத்தில் அலுப்புத் தட்டிச் சலித்து போகிறது. தம்பதியை மருத்துவரிடமிருந்து விலக்கிவைக்கும் விஷயங்களில் ஒன்று, தாம்பத்திய உறவு என்று கருதப்படுகிறது. ஆகவே உறவு வெறும் கடமையாக ஆகிவிடாமல் உயிர்ப்போடு வைத்திருப்பது எப்படி? என்று கூறுகிறார்கள், பாலியல் நிபுணர்கள் அவை பற்றி… 
வழக்கத்திலிருந்து வேறுபடுங்கள்
நீங்கள் இருட்டை விரும்பும் கூச்சசுபாவி என்றால் வெளிச்சத்திலும், வெளிச்சத்திலேயே படுக்கையறை விளையாட்டை வைத்துக்கொள்ள விரும்புபவர் என்றால் இருட்டிலும் உறவை வைத்து பாருங்களேன். புதிய சூழல் ஒரு புது எழுச்சியை ஏற்படுத்தக்கூடும் என்கிறார்கள் பாலியல் மருத்துவர்கள்.

எப்போதும் துணையின் எதிர்பார்ப்புக்கு மட்டும் ஈடுகொடுப்பதற்கு பதிலாக தாமே முன்வந்து முயற்சியை மேற்கொள்வது துணையின் ஆர்வத்தைத் தூண்டும் என்கின்றனர். `செக்சியான ஒரு சிறு நடனம், கவர்ச்சியான உள்ளாடைகள் உங்களின் கணவரை ஈர்க்கக்கூடும்என்று பெண்களுக்குக் கூறுகிறார்கள்.

தனித்தனியே சுற்றுலா

பிரிந்திருபது அன்பையும், பாசத்தையும் மட்டுமல்ல, ஆசையையும் கூட்டும். எனவே முடிந்தால் தம்பதிகள் இருவரும் தனித்தனியே வெளியிடங்களுக்குச் சில நாட்களுக்குச் சென்று வாருங்கள். இது சற்றுக் கடினம்தான். ஆனால் திட்டமிட்டு ஒருங்கிணைத்தால் இதற்கான ஏற் பாடுகளைச் செய்ய முடியும். ஒரு வாரம் பிரிந்திருந்து பாருங்கள், இரு வரும்பரஸ்பரம் அணைப்பை எதிர்நோக்கும் ஆர்வம் எகிறும் என்று மனோவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்கணக்கில் பிரிந்திருக்க வாய்பில்லாதவர்கள், ஒருவரிடம் ஒருவர் விலகியிருக்கும்படி மணிக்கணக்கில் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்துங்கள், ஆனால் அதே நேரம் அதை ஒரு வழக்கமாக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் செக்சாலஜிஸ்ட்கள் ஆலோசனை கூறுகின்றனர். 

ஒரு புதிய இடத்தில்

ஒரு புதிய இடத்தில் அல்லது அமைதியான உணவகத்தில் ஒருநாள் மாலையில் தன்னை வந்து சந்திக்குமாறு துணைக்குக் குறிப்பு எழுதி வைங்கள். அங்கே நீங்கள் ஈர்க்கும் விதமாக ஆடை அணிந்து சென்று, ஒரு மூலையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொள்ளுங் கள். உங்கள் துணைவர் குறிப்பிட்ட நேரத்தில் எதிர்பார்போடு அங்கு வருவார்.

உங்களைக் கண்டு பிரமித்து போவார். ஒரு பொது இடத்தில் காதலர்கள் சந்தித்துக் கொள்ளும் `த்ரில்அங்கே இருக்கும். நெருப்பும் பற்றிக் கொள்ளும். புதிய கோணங்கள், புதிய இடங்கள் எப்போதும் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று குடும்ப நல மருத்துவர் தெரிவிக்கிறார்.

பிளாஷ்பேக்கில் முழ்குவது

நீங்கள் முதன்முதலாக `அதுவைத்துக்கொண்ட இடம், அந்த சூழலை மறக்க முடியுமா? அப்போது அவர்(ள்) நடந்துகொண்ட விதம், துணையிடம் தெரிந்த பதற்றம், சிரிப்பை வர வழைத்த சிறு குளறுபடிகள் எல்லாவற்றைம் மறக்க முடியாதல்லவா? அவை எல்லாவற்றைம் ஒருமுறை `பிளாஷ்பேக்ஓட்டி பாருங்கள். தேனிலவின்போது எடுத்த புகைபடங்கள், வீடியோவை பாருங்கள். அந்த நாட்களில் நீங்கள் பின்னணியில் ஒலிக்க விட்ட இசையை மீண்டும் ஒருமுறை ஒலிக்க விடுங்கள். மறுபடியும் அந்த ஆரம்பகால வேகம், தாகம் பிறக்கும் என்கிறார்கள்.

தடாலடியான செயல்பாடுகள்

விறுவிறுப்பு, `த்ரில்லை ஏற்படுத்தும் செயல்கள் `டோபோமைனைவிடுவிக்கின்றன என்கிறார், ரட்சர்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஹெலன் பிஷர். காதல் உணர்வுடன் தொடர்புடைய ரசாயனம் `டோபோமைன்.உறவு விருப்பத்துக்கான ஹார்மோனாகிய `டெஸ்ட்டோஸ்டிரோனின்அளவை `டோபோமைன்கூட்டுகிறது. வேகமான ஆற்றில் படகைச் செலுத்துவது, உயரமான இடத்திலிருந்து தக்க பாதுகாபுடன் தலைகீழாகக் குதிக்கும் `பங்கி ஜம்பிங்போன்றவை உங்களுக்கு உதவக்கூடும்.

சுறுசுறுப்பாக வேலைகளில் ஈடுபடுவது `எடார்பினைவிடுவித்து உங்களை ஓர் உச்சத்தில் வைக்கிறது, அப்போது `பங்கி ஜம்பிங்போன்றவை கூடத் தேவையில்லை என்கிறார் குடும்ப நல ஆலோசனை நிபுணர் வர்க்கா. நீங்கள் உங்களுக்கு பிடித்த விளையாட்டில் ஈடுபடலாம் அல்லது சிறு உடற்பயிற்சியை நாடலாம் என்றும் அவர் யோசனை கூறுகிறார்.

விலகிசீண்டி….

தம்பதிகளை பொறுத்தவரை படுக்கையறையில் சற்றே விலகியிருப்பது பொதுவாக பரிந்துரைக்கபடுவது இல்லை. இருவரில் ஒருவர் மட்டும் ஆசை கொண்டு அதற்கு அடுத்தவர் இசைந்து கொடுப்பது, `அவசரமான உறவுகள்வைத்துக்கொள்வதற்கு இரண்டு வார கால விடுப்பு அளியுங்கள். ஒரு குறிப்பிட்ட நாளில் `அதைவைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுங்கள். அதுவரை நீங்கள் உங்கள் துணையைச் சீண்டி வாருங்கள்.

விலகியிருக்கும் அந்த ஒரு வார காலம் `அவருக்குநீண்ட காலமாகத் தெரியும். அதன் பின் படுக்கையில் இணைம்போது அற்புதமாகவும் இருக்கும். ஆனால் இதுகுறித்து இருவரும் பேசி சம்மதம் என்றால் மட்டுமே ஈடுபடுங்கள், `விடுப்புகாலம் மிகவும் அதிகமாகவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் பாலியல் ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்....!

எம் எஸ் வேர்டிற்கான ஷார்ட்கட் கீ தொகுப்புகள்

எம் எஸ் வேர்டிற்கான ஷார்ட்கட் கீ தொகுப்புகள்

வேர்ட் தொகுப்பிற்கான ஷார்ட்கட் கீ தொகுப்புகள் பல இருந்தாலும்,
சில அதிகம் பயன்படுத்தப்படுவதாகவும், சில சிக்கல்களுடன் அமைந்ததாகவும்,
சில அதிகப் பயன் தருவதாக இருந்தாலும் அவ்வளவாகப்
பயன்படுத்தப்படாதவையாகவும் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1. Shift + F3: இந்த கீ தொகுப்பு ஆங்கில எழுத்துக்களின் முதல் எழுத்தையோ
அல்லது மற்றவற்றையோ, மூன்று வகைகளில் பெரிய எழுத்தாக மாற்றும் வசதியைத்
தருகிறது. இது நம் நேரத்தினை மிச்சப்படுத்துவதாக இருந்தாலும், சில
சிக்கல்களையும் இணைத்துள்ளது. பெரிய எழுத்து தேவைப்படாத சொற்களிலும்,
முதல் எழுத்தினைப் பெரிய எழுத்தாக மாற்றுகிறது.

2. Ctrl + Shift + N: வழக்கமான ஸ்டைவழங்குகிறது. மற்றவர்களின் ஆவணங்களைப் பயன்படுத்துகையில், அவர்கள்
பயன்படுத்திய பார்மட்டிங் அமைப்புகள் நமக்குத் தேவைப்படாததாகவும், சில
வேளைகளில் எரிச்சல் ஊட்டுவதாகவும் அமையும். குறிப்பாக, இணைய
தளங்களிலிருந்து நாம் டெக்ஸ்ட்களைக் காப்பி செய்து பேஸ்ட் செய்கையில்
இந்த சிரமம் ஏற்படும். அப்போரண ஸ்டைலில் டெக்ஸ்ட்டை அமைக்க இந்த
ஷார்ட்கட் கீ தொகுப்பு நமக்கு பயன்படுகிறது. இது பலர் அடிக்கடி
பயன்படுத்தாத கீ தொகுப்பாகும்.

3. Ctrl + Shift + C: தேர்ந்தெடுக்கப்பட்டு காப்பி செய்யப்படும்டெக்ஸ்ட்டினை, டெக்ஸ்ட்டோடு அதன் பார்மட்டினையும் சேர்த்து காப்பி
செய்திட உதவும் ஷார்ட் கட் கீ தொகுப்பு. இந்த கீ தொகுப்பினைப்
பயன்படுத்தி டெக்ஸ்ட் டைக் காப்பி செய்தவுடன், எந்த இடத்தில் அந்த
டெக்ஸ்ட்டினை ஒட்ட வேண்டுமோ, அங்கு சென்று Ctrl + Shift + V கொடுத்தால்
போதும். அங்கு பார்மட் அமைப்புடன் டெக்ஸ்ட் பேஸ்ட் செய்யப்படும். இதனை
பார்மட் பெயிண்டர் என்ற வசதி மூலமும் மேற்கொள்ளலாம். ஆனால் பார்மட்
பெயிண்டர், இந்த வேலை முடிந்தவுடன், அதனை மறந்துவிடும். ஆனால் இந்த
ஷார்ட் கட் கீ, நீங்கள் வேர்டை விட்டு வெளியேறும் வரை, பார்மட்டிங்
அமைப்பினை நினைவில் வைத்திருக்கும்.

4. Alt + F9: பீல்டு என்று சொல்லப்படும் குறியீடுகளை காட்டவும்
மறைக்கவும் செய்திடும் ஷார்ட்கட் கீ தொகுப்பு இது. பீல்டு கோடு
பயன்படுத்துபவர்களுக்கு ஒரு சிரமம் இருக்கும். எந்த சொற்கள் பீல்டு
குறியீடு பயன்படுத்தி அமைக்கப்பட்டது, எந்த சொற்கள் அவை இல்லாமல்
வழக்கமான முறையில் அமைக்கப்பட்டது எனத் தெரியாமல் தடுமாறுவார்கள்.
அவர்கள் இந்த ஷார்ட் கட் கீகளை அழுத்தி, மிக எளிதாக அவற்றைக் கண்டு
கொள்ளலாம்.

5. F4: இந்த கீயும் பலரால் அடிக்கடி பயன்படுத்தப்படாத, ஆனால் மிகப்
பயனுள்ள ஷார்ட்கட் கீ ஆகும். வேர்டில் ஒருமுறை மேற்கொண்ட செயலை, அடுத்து
அடுத்து மேற்கொள்ள, இந்த கீயினை அழுத்தினால் போதும். எடுத்துக்காட்டாக
ஒரு சொல்லினை சிகப்பு வண்ணத்தில் அமைக்க, அதனைத் தேர்ந்தெடுத்து வண்ணக்
கட்டம் பெற்று, சிகப்பு வண்ணத்தைக் கிளிக் செய்து அமைக்கிறீர்கள். இதே
போல, மற்ற இடங்களில் உள்ள சொல் அல்லது சொற்களைச் சிகப்பு வண்ணத்தில்
அமைக்க, அவற்றைத் தேர்ந்தெடுத்து, எப்4 கீ மட்டும் அழுத்தினால் போதும்.
அவையும் அவ்வாறே அமைக்கப்பட்டுவிடும். இது மட்டுமின்றி, அழித்தல்,
டெக்ஸ்ட் அமைத்தல், பேஸ்ட் செய்தல், பார்மட் அமைத்தல் என எந்த வேலையையும்
இந்த கீ தொடர்ந்து மேற்கொள்ள உதவுகிறது. டேபிளில் சில வரிசைகளை அடுத்த
அடுத்த இடத்தில் ஒட்ட வேண்டி இருந்தால், முதலில் ஓர் இடத்தில்
ஒட்டிவிட்டுப் பின்னர், ஒட்ட வேண்டிய இடத்தில் கர்சரை வைத்துக் கொண்டு
இந்த எப்4 கீயினை அழுத்தினால் போதும். வரிசைகள் ஒட்டப்படும்.

6. Ctrl + H: பைண்ட் அண்ட் ரீபிளேஸ் டயலாக் பாக்ஸினை, ரீபிளேஸ் டேப்பைத்
திறந்தபடி நம் பயன் பாட்டிற்குக் கொண்டு வரும். கண்ட்ரோல் + எப்
அழுத்தினால், இதே டயலாக் பாக்ஸ் பைண்ட் டேப்பில் திறந்தபடி நமக்குக்
கிடைக்கும். இதனையே தான் நாம் பயன்படுத்திப் பின்னர் ரீபிளேஸ் கட்டம்
செல்கிறோம். அதற்குப் பதிலாக இந்த ஷார்ட் கட் கீ தொகுப்பினையும்
பயன்படுத்தலாம்.

7. Ctrl அழுத்தியவாறே, ஏதேனும் ஒரு டெக்ஸ்ட் அல்லது ஆப்ஜெக்ட் ஒன்றினை
இழுப்பது: இந்த வேலையை மேற்கொண்டால், அந்த டெக்ஸ்ட் அல்லது ஆப்ஜெக்ட்
காப்பி செய்யப்படும். இது ஆப்ஜெக்ட் களுடன் பயன்படுத்த அதிகம் பயன்படும்.
ஏதேனும் ஒரு ஆப்ஜெக்ட் சரியற்ற முறையில், டெக்ஸ்ட்டுடன்
ஒட்டப்பட்டிருந்தால், இந்த கீ மற்றும் மவுஸ் பயன்படுத்தி, இழுத்து, அது
இருக்கும் இடத்தினைச் செம்மையாக வைத்திடலாம். நீங்கள் விருப்பப்படும்
இடத்தில், துல்லியமாக வைத்திட இந்த கீ முறை உதவும். கண்ட்ரோல் கீயினை
விடும் முன், படத்தை அல்லது டெக்ஸ்ட்டினை விட்டுவிட வேண்டும். இல்லை
எனில், வேர்ட் ஒரிஜினல் டெக்ஸ்ட் அல்லது படத்தைப் புதிய இடத்திற்கு
நகர்த்திவிடும்.
இதற்கு ஒரு போனஸ் தகவலும் உண்டு. இதனுடன் ஷிப்ட் கீயினையும் சேர்த்து
அழுத்தினால், வேர்ட் காப்பி செய்யப்படுவதனை, அதன் ஒரிஜினல் இருக்கும்
இடத்திற்கு நேராக அதே வகையில் அமைத்திடும்.

8. Ctrl + Q: பத்தி எனப்படும் பாரா ஒன்றில் செட் அப் செய்யப்பட்டதற்கும்
கூடுதலாக சில பார்மட்டிங் வகைகள் அமைக்கப் பட்டிருந்தால், மொத்த
பத்திக்குமாக அவை நீக்கப்பட இந்த கீகளைப் பயன்படுத்தலாம். அதாவது
டாகுமென்ட்டில் பாரா ஸ்டைல் என வரையறை செய்யப்பட்டவை தவிர, டாகுமெண்ட்டை
அமைத்தவர் தாமாக, ஏதேனும் பார்மட்டிங் அமைத்திருந்தால், இந்த கீகளைப்
பயன்படுத்தி அவற்றை நீக்கிவிடலாம்.

9. Ctrl + 0 (சுழியம் எனப்படும் சைபர்): கர்சர் அப்போது இருக்கும்
பாராவிற்கு முன்னால் 12 புள்ளி இடைவெளியினை அமைக்கும் அல்லது நீக்கும்.
டேபிள் ஒன்றில் இது அதிக பயன்பாட்டினைத் தரும். எடுத்துக்காட்டாக, டேபிள்
கட்டத்தோடு ஒட்டிப் போயிருக்கும் டெக்ஸ்ட்டினைத் தெளிவாக அமைப்பதற்கு,
இந்த ஷார்ட்கட் கீகளைப் பயன்படுத்தி எளிதாக அமைக்கலாம்.

1டெக்ஸ்ட் நெட்டுவாக்கில் தேர்ந்தெடுக்கப்படும். இது அவ்வளவாகப்
பயன்படுத்தப்படுவதில்லை என்றாலும், பலருக்கு இது அதிகப் பயன்களைத் தரும்.
ஆல்ட் கீயினை முதலில் அழுத்திக் கொண்டு, பின்னர் டெக்ஸ்ட்
தேர்ந்தெடுப்பதில் ஈடுபட வேண்டும். கீயை அழுத்திய பின், மவுஸால் நெட்டு
வாக்கில் இழுக்க வேண்டும். அதே போல மவுஸ் பட்டனை விடும் முன் ஆல்ட்
கீயினை விட்டுவிட வேண்டும். நெட்டு வாக்கில் இவ்வாறு தேர்ந்தெடுத்த
டெக்ஸ்ட் பகுதியில், மற்ற தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டில் என்ன எல்லாம்
மாற்றங்களை மேற்கொள்கிறோமோ, அவை அனைத்தையும் இந்த வகையிலும்
மேற்கொள்ளலாம்.மாற்றலாம். பிற வேலைகளையும் மேற்கொள்ளலாம்.

குழந்தை வரம் கொடுக்கும் இயற்கை மூலிகைகள்!



குழந்தை வரம் கொடுக்கும் இயற்கை மூலிகைகள்!

இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடலையும் மனதையும் நோய்க்கு ஆளாக்கிவிடுவார்கள்.
ஆண்மை குறைபாடோ, மலட்டுத்தன்மையோ இந்த குறைபாடுகளை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம் இருக்கிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் எளிதில் நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். குறையிருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்களேன்.
ஆண்மைக்கு ரோஜா குல்கந்து
காதலின் சின்னம் ரோஜா மலர். இதிலிருந்து தயாரிக்கப்படும் "குல்கந்து" இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குல்கந்து உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது.
தாது விருத்தி தரும் பூசணிக்காய்
பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த லேகியத்தை தினசரி சாப்பிட்டு வர உடல் வலிமை பெறுவதோடு பொலிவடையும் அதோடு தாது விருத்தி ஏற்படும். பூசணிக்காயின் விதைகள் ஆண்மை குறைபாட்டினை நீக்கும். இந்த விதைகளை சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியடையும்.
இனிமையான உறவுக்கு இலுப்பை பூ
இலுப்பை மரத்திலிருந்து கிடைக்கும் பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.மெலிந்த உடலுள்ளவர்கள் இலுப்பை பூக்களை பசும்பால் விட்டு அரைத்து காய்ச்சிய பாலுடன் சிறிது சர்க்கரை சேர்ந்து பருகி வந்தால் நாற்பத்தெட்டு நாட்களுள் உடம்பு தேறும். ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் பசும் பாலுடன் இலுப்பைப் பூ கஷாயத்தைச் சேர்த்து பருகினால் ஆண்மைக் குறைபாடு குணம் அடையும்.
குழந்தை வரத்திற்கு ஆலம்பழம்
சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும். மரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைக்கவேண்டும். பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டுவைத்துக்கொள்ளவேண்டும். தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும். 48 நாட்கள் இந்த பொடியை குடித்து வர மலடு நீங்கி குழந்தை பிறக்கும்.

சில மருத்துவ குரிப்புகள்



சில மருத்துவ குரிப்புகள்

1. இருமல் தணிய தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட அளவு எள் உட்கொண்டு
 வந்தால் குணமாகும்.

2. பச்சைக் கடுக்காயைப் பாலில் அரைத்துச் சாப்பிட இருமல், ஈளை, சீதக்கடுப்பு, புகையிருமல் ஆகியவை குணமாகும்.

3. கடுக்காயை வடகம் செய்து உட்கொண்டு வர வாந்தி, மூலம், வீக்கம், வயிற்றுவலி, சூலை, இரத்த சோகை முதலியன நீங்கும்.

4. பல்லில் ரத்தக் கசிவு உள்ளவர்கள் கடுக்காய், உப்பு, சீரகம் மூன்றையும் அரைத்து தினம் இருவேளை பல் துலக்க சுகம் பெறும்.

5. நிம்மதியான உறக்கம் பெற ஒரு தேக்கரண்டி கசகசாவை எடுத்து இரண்டு முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி சிறிது கற்கண்டும் சேர்த்து பருகினால் நிம்மதியான உறக்கத்தைப் பெறலாம்.

6. முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகு செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

7. இலவங்கப் பூ சூரணத்தை முலைப்பால்விட்டு உறைத்து நெற்றியில் பற்றிட ஜலதோஷம் போகும்.

8. நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

9. படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

10. பித்தம் நீங்க கருவேப்பிலையைத் துவையல் செய்து சாப்பிடுவது பித்தத்தைப் போக்கும். சுக்கும் பனை வெல்லமும் போட்டுக் காய்ச்சிய நீரைக்குடித்து வந்தால் பித்தம் ஏற்படாது.

11. பித்தத்தால் ஏற்படும் தலைச்சுற்று போக காலை வெறும் வயிற்றில் கொஞ்சம் வேப்பம்பூவுடன் சிறிய துண்டு கருப்பட்டி வைத்து அரைத்து இரண்டு பெருநெல்லிக்காய் அளவு சாப்பிடவும்.

12. சாதாரண தலைவலிக்கு, சுக்கை தண்ணீர்விட்டு அரைத்து வலிக்கும் இடத்தில் பற்றுப் போட்டால் நீங்கும். சுரத்தின் போது ஏற்படும் கடுமையான தலைவலிக்கு கடுகை அரைத்து உள்ளங்காலில் பற்றுப்போட்டால் குணமாகும்.

13. வெற்றிலையின் காம்பு, லவங்கம், ஏலரிசி ஆகியவற்றை சம அளவாக எடுத்து பால் கலந்து அரைத்து, சூடாக்கி, கொதிக்க வைத்து நெற்றிப் பொட்டிலும், உச்சந்தலையிலும் போட்டுவர கடுமையான தலைவலி விலகும்.

14. சாதாரண பல்வலிக்கு ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டு அடக்கிக் கொண்டாலே போதும் வலி அதிகமாக இருந்தால் கடுகை அரைத்துப் பல்வலி இருக்கும் பக்கம் கன்னத்தின்மேல் பொடி செய்து பற்றுப் போட்டால் குணமாகும்.

15. படிகாரம், லவங்கப்பட்டை, சுக்கு, கடுக்காய் ஆகியவற்றை சம அளவு எடுத்து இடித்து சலித்து அந்தத் தூளைக் கொண்டு காலையிலும், இரவிலும் பல் துலக்கி வந்தால் எவ்வகையான பல் வலியும் அகலும்.

16. ஈரல், பித்தப்பை, ரத்த ஓட்டம் சம்பந்தமான வியாதிகள், நரம்பு மண்டலம் சரியாக இயங்காமை, ரத்த சோகை மற்றும் சில நோய்களைக் குணப்படுத்த திராட்சை பயன்படுத்தப்படுகிறது.

17. ரத்தம் சுத்தமடைய பசும்பாலில் உலர்ந்த அல்லது பச்சை திராட்சையைப் போட்டு காய்ச்சி, கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமடைந்து உடல் நலம் பெறும்.
18. பித்தம் நீங்க கருவேப்பிலையைத் துவையல் செய்து சாப்பிடுவது பித்தத்தைப் போக்கும். சுக்கும், பனைவெல்லமும் போட்டுக் காய்ச்சிய நீரைக்குடித்து வந்தால் பித்தம் ஏற்படாது.