Tuesday, 28 January 2014

முனைவர். பா. அருன் பிரியா கவிதைகள் மழை



     முனைவர். பா. அருன் பிரியா கவிதைகள்
                 மழை

     காய் கதிர் செல்வன்
     கடல் நீர் குடித்து
     தாய் மேகமாய்
     தவழவிட..........!
     தவழ்ந்து திரியும்
     தாய் மேகத்தை
     குளிர் பூந்தென்றல்
     கோதிவிட.....!
     ஒளியும் ஒலியும்
     முன் பின் சூழ
     கனிந்த மேகம் கதிர் மறைக்க
     இரைந்து கொட்டும் மழை நீரே.....
     இறைவனுக்கு பதிலீடே
     வையம் வென்ற மானுடத்தின்
     வேரை நனைக்க வருவாயே.....!

               எண்ணமும்  எழுத்தும்
                  பா. அருன் பிரியா M.A, M.phil, PHD, B.ed.

                மழை

     ஒலி ஒளி அமைப்புடன்
     வானத்திரை வழி அரங்கேறும்
     மானுடத்தின் கண்ணீர்   மழை.....!
     மனித குலத்தின்
     மாப்பசி தீர்க்க
     நெற்கரம் நீட்டி வரும்
     வயல் குழந்தையின்
     தாய்ப்பால்  மழை.....!
     பொன்செய் நிலத்திற்க்கு
     புனித நீர்   மழை
     மனிதனின்
     விழி நனைத்து
     நா நனைத்து
     உயிர் நனைத்து
     உளம் நனைக்கும்
     ஆரமிழ்தம்  மழை.....!
     மனிதனின்றி மாற்றம் இல்லை
     ஆனால்
     மழை இன்றேல்
     மனிதனே இல்லை.....!

                 சிந்தனையும் செயலாக்கமும்
                     பா. தினேஷ் பாபு.

No comments:

Post a Comment